சரண் இயக்கத்தில் சிம்பு
Posted: Fri,12 Jan 2018 03:11:05 GMT
அஜீத் நடிப்பில் வெளியான காதல் மன்னன், அட்டகாசம், அமர்களம், அசல் ஆகிய படங்களை இயக்கியவர் சரண். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, விக்ரமின் திரைப்பயணத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்தது.
பரபரப்பான வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்த சரண், தொடர் தோல்விகளால் சற்றே இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் சிம்புவுடன் களமிறங்குகிறார்.
சரணை போலவே, ஒரு கட்டாய வெற்றியை எதிர்பார்த்திருக்கும் சிம்பு, சரண் இயக்கத்தில் நடிக்க விருப்பத்துடன் இருக்கிறாம், அஜீத், விக்ரம் ஆகியோருக்கு திருப்பு முனை ஏற்படுத்தியதைபோல் தனக்கும் ஒரு திருப்பு முனையை சரண் ஏற்படுத்துவார் என நம்புகிறாரம் சிம்பு.
  • Share
  • 0 Comment(s)