பூசணிக்காய் பிரட்டல் செய்முறை
Posted: Fri,12 Jan 2018 03:03:59 GMT
போகிப்பண்டிகையை, தமிழ்நாட்டு கிராமங்களில் சங்கிராந்தி என்றும், காப்புகட்டு பண்டிகை எனவும் கொண்டாடுவதுண்டு. வேப்பிலை, சிறு பீழை பூ ஆகிவற்றை சேர்த்து வீட்டின் முற்றங்களில் காப்பு கட்டுவதால் இப்பண்டிகைக்கு காப்பு கட்டு என்ற பெயர். அந்நாள் இரவு, பூசணிக்காய், அவரை ஆகியவற்றை சமைத்து கடவுளுக்கு படைப்பது மரபு.
அவ்வாறு செய்யப்பட்டும் பூசணிக்காய் பிரட்டலில் மசாலா பொருட்கள் ஏதும் சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அம்முறையை இங்கே காண்போம்
பூசணிக்காய் பிரட்டல்
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 5
உப்பு, எண்ணை - தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
பூசணிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், ஒரு வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெட்டி வைத்த பூசணிக்காய் சேர்த்து, குழுக்கவும், கரண்டி பயன்படுத்தி கிளறினால், மசித்து விடும் என்பதால் பாத்திரத்தோடு சேர்த்து குழுக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து வேகவைக்கவும். சுவையான பூசணிக்காய் பிரட்டலை கடவுளுக்கு படைத்து உண்டு மகிழவும்.
  • Share
  • 0 Comment(s)