உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு
Posted: Fri,12 Jan 2018 02:30:25 GMT
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதிகள் ஆகியோர் செய்தியாளர்களிடம் இது குறித்து கூறும்போது, “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம்.
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
  • Share
  • 0 Comment(s)