இனி ரேஷன் கடைகளில் உளுந்து இல்லை: அமைச்சர் தகவல்
Posted: Fri,12 Jan 2018 02:27:17 GMT
ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் நிறுத்தப்பட்டது குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம், இன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினர். திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “இனி ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் இல்லை” என்று பதிலளித்தார்.
” விலை உயர்வு, மத்திய அரசின் மானியம் நிறுத்தம் காரணமாக உளுந்து விநியோகம் இல்லை என்றும். கடந்த காலங்களை விட அதிக அளவில் பொதுவிநியோகத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் மாதம் ஒன்றுக்கு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்குதுறைக்கு கூடுதலாக 207 கோடி ரூபாய் செலவாகிறது” என்று தெரிவித்தார். மேலும், “இனி உளுந்துக்கு பதில் துவரம் பருப்பு வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)