ஒபிஎஸ் – இபிஎஸ்க்கு பயம்: சி.ஆர்.சரஸ்வதி பேச்சு
Posted: Fri,12 Jan 2018 02:24:57 GMT
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான நடிகை சி.ஆர்.சரஸ்வதி இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார். சசிகலாவுடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.அர்.சரஸ்வதி, “டி.டி.வி தினகரனுக்கு தமிழகத்தில் அமோக ஆதரவு எழுந்து இருக்கிறது என்பதை அறிந்து சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் சிறையில் நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது வைத்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் தான் பயந்து வருகிறார்கள். இது தோல்வியின் காரணமான பயமா அல்லது பாஜகவின் உத்தரவு வரவில்லையே என்பதற்கான காத்திருப்பா என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.
பாஜக தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்து எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரையும் தலையாட்டி பொம்மைகளாக்கி வைத்திருக்கிறது. ஆனால் பாஜக வெற்றி பெற அண்ணன் டி.டி.வி. தினகரன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கிய அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பிரதமர் மோடி படம் போட்டு காலண்டர் அச்சடிக்கும் அவலத்தை எங்கு போய் சொல்வது ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)