ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்
Posted: Fri,12 Jan 2018 01:08:08 GMT
பங்கு வர்த்தகத்தின் வார கடைசிநாளான இன்று காலை ஏற்றத்துடன் பங்குச்சந்தைகள் தொடங்கியது. இன்போசிஸ் நிறுவனம் தனது 3வது காலாண்டு லாபம் குறித்த விபரங்களை வெளியிட உள்ளதால், அந்நிறுவன பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்தன
இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 112.01 புள்ளிகள் உயர்ந்து 34,615.50 புள்ளிகளாகவும், நிப்டி 31.10 புள்ளிகள் உயர்ந்து 10,682.30 புள்ளிகளாகவும் இருந்தது.
  • Share
  • 0 Comment(s)