”அமெரிக்காவை எதிர்பார்க்கக்கூடாது”, ராணுவ தளபதி பேச்சு
Posted: Fri,12 Jan 2018 01:06:12 GMT
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், ” வேதியியல், உயிர் வேதியியல், அணு ஆயுதங்கள் மூலம் உருவாகும் அச்சுறுத்தல்கள், பயங்கரவாதிகளால் சாத்தியமாகும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு துறை, தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீன ஆயுதங்கள் இறக்குமதி மற்றும் வீரர்களுக்கு நவீன பயிற்சி அளிப்பதே சிறந்த வழியாகும், சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடல்ல” என்று தெரிவித்தார்.
மேலும், “அமெரிக்காவின் நடவடிக்கையானது எவ்வளவு தூரத்திற்கு பாகிஸ்தான் விவகாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கூறுவது மிகவும் முன்கூட்டியே கருத்தை வெளிப்படுத்துவது. பாகிஸ்தான் விவகாரத்தில் நாம் செய்ய வேண்டியை பணியை அமெரிக்கா செய்யும் என நாம் எதிர்பார்க்கவே கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)