துணை சபாநாயகரை கிண்டல் செய்த ராமதாஸ்
Posted: Fri,12 Jan 2018 01:03:55 GMT
தமிழக சட்டப்பேரவையில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன் கூறிய கருத்தை நய்யாண்டி செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், “ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் - அமைதி, இலக்கியம், அறிவியலுக்கு தான் நோபல் பரிசு உண்டு. ஊழலுக்கு நோபல் பரிசு இல்லையே?
தொட்டில் குழந்தை திட்டத்திற்காக ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: பொள்ளாச்சி ஜெயராமன் - அப்படியானால் ஊழலுக்காக ரூ.100 கோடி தண்டமும், 4 ஆண்டு சிறையும் நீதிமன்றம் விதித்ததே. அதற்கு என்ன விருது வழங்குவது?
ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் - இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்பது கூட தெரியாத அறிவாளி. செல்லூர் ராஜுவுக்கு சிறந்த சீடர்!” என்று ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)