Posted: Fri,12 Jan 2018 12:58:31 GMT
இந்திய விண்வெளிவெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தலைவராக பணியாற்றிய கிரண்குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, திரு கே.சிவன் இஸ்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாரட்டுக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிவன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிடிவி தினகரன், “தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே சிவன் அவர்கள் இஸ்ரரோ தலைவராக பதவி ஏற்பது குறித்து எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு இது பெருமையான தருணம்! உங்களது சீரிய தலைமையில் இஸ்ரோ மேலும் பல பெருமைகளை அடையும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இஸ்ரோ’வின் புதிய தலைவராக தமிழரான திரு.சிவன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை வகிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இவர் தலைமையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this