ஸ்கெட்ச் படத்துக்கு வரவேற்பு எப்படி?
Posted: Fri,12 Jan 2018 08:35:47 GMT
வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். அதிரடி ஆக்சன் பட வகையறாவில் வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு விக்ரமுக்கு இப்படம் வெர்றிப்படமாக அமையும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பி மற்றும் சி செண்டர்களில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் காட்சியை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில், ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார் சியான் விக்ரம். படம் முடிந்து வெளியே வரும்போது விக்ரமை சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் சியான் சியான் என்று கோஷமிட்டது, படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது போல் அமைந்ந்திருந்தது.
  • Share
  • 0 Comment(s)