தானா சேர்ந்த கூட்டம் படம் எப்படி?
Posted: Fri,12 Jan 2018 08:34:49 GMT
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், செந்தில், கார்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஏ,பி,சி என மூன்று செண்டர்களிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் வெளியீட்டு படங்களில் இப்படமே ஆதிக்கம் செலுத்தும் எனவும், வசூல் ரீதியாக முதலிடம் இப்படம் பெறும் எனவும் திரையுலக வர்த்தக புள்ளிகள் கணித்துள்ளனர்.
  • Share
  • 0 Comment(s)