மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு
Posted: Thu,11 Jan 2018 05:22:42 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் கங்கா சாகர் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார், வரும் 14, 15 தேதிகளில் நடைபெற உள்ள கங்கா சாகர் நிகழ்ச்சியின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது அவ்விழாவிலும் மம்தா பானர்ஜி கலந்த்து கொண்டார்.
அதே போல் சில நாட்கள் முன்பு மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில், திரிணமுல் காங்கிரஸ் சார்பில் பிராமணர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநில எதிர்கட்சி தலைவர் அப்துல் மன்னன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. இதனால் சமூகம் பிளவுபடும் சூழல் ஏற்படும். மேற்குவங்கத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் சமூக நல்லிணக்கம் பாழ்படும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)