சத்ருகன் சிஹ்கா வீடு இடிப்பு
Posted: Thu,11 Jan 2018 05:20:57 GMT
பிரபல நடிகரும், பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா, மும்பையில் வசித்துவரும் எட்டு மாடி வீட்டின் சில பகுதிகள், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக இடிக்கப்பட்டுள்ளது. வீட்டை இடித்த மாநகராட்சி ஊழியர்களுக்கு சத்ருகன் சின்ஹா முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து பேசியிருக்கும் சத்ருகன் சின்ஹா, “உண்மை, புள்ளிவிவரம் மற்றும் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட நேர்மையான அரசியலுக்கு நான் விலை கொடுக்கிறேனா? என்று பொதுமக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கு என்னிடம் பதில் இல்லை.
டெல்லியில் என்னுடைய பாதுகாப்பை நீக்கி, நடவடிக்கையை தொடங்கினார்கள். இப்போது என் வீட்டை இடிக்கும் செயல். ஒட்டுமொத்தத்தில், மும்பையில் சில உணவகங்களில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவங்களை உதாரணம் காட்டி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அப்படி என்றால், இதனை நான் வரவேற்கிறேன். மாநகராட்சி அதன் 2–ம் அத்தியாயத்தை தொடங்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)