Posted: Wed,10 Jan 2018 08:12:39 GMT
கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசான தூறல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் விட்டு விட்டு லேசான மழை பெய்யும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இதற்கிடையே வருகிற 12-ந்தேதியும், 13-ந்தேதியும் தென் தமிழகத்தில் பரவலான இடங்களில் மிதமான மழைபெய்யும் என்றும் வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this