வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா?
Posted: Wed,10 Jan 2018 07:15:18 GMT
இந்த ஆண்டின் மத்திய நிதி அறிக்கை வரும் பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி , தற்போதைய வருமான வரிவிலக்கு உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரியும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
  • Share
  • 0 Comment(s)