Posted: Fri,05 Jan 2018 02:59:57 GMT
ஆண்டு தோறும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி வரும் 10 தேதி தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தக கண்காட்சி ஜனவரி பத்து அன்று சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது.
706 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்.
புத்தக கண்காட்சி நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்க்காக 5 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் இக்கண்காட்சி நாள்தோறும் மதியம் 2.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடைபெற உள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this