பங்குச்சந்தையில் உயர்வு
Posted: Fri,05 Jan 2018 01:54:08 GMT
2018ம் ஆண்டு தொடங்கியது முதலே சரிவில் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் பெற்றன.
நேற்றயை வர்த்தக நேரமுடியில் தொடங்கிய இந்த உயர்வு இன்றும் நீடித்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில் புதிய உயர்வுடன் பங்குசந்தை வர்த்தகம் நிறைவடைந்துள்ளது
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் உள்ளிட காரணிகளால் இன்று உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை, இன்று நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டது. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 184.21 புள்ளிகள் உயர்ந்து 34,153.85-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 54.05 புள்ளிகள் உயர்ந்து 10,558.85-ஆகவும் முடிந்தன.
  • Share
  • 0 Comment(s)