வங்கிகளில் கள்ள நோட்டுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
Posted: Wed,03 Jan 2018 02:58:28 GMT
வங்கிகளில் வழங்கப்படும் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் கலந்து வருவது, பொது மக்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது. சமீப காலமாக பல இடங்களில் வங்கிகளில் நேரடியாக பெறப்படும் நோட்டுகளிலேயே கள்ளநோட்டுகள் கலந்து வருவது குறித்து தெரிவித்துள்ள அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், வெங்கடாசலம், “ வங்கி ஊழியர்கள், கள்ள நோட்டுகள் சரிபார்க்கும் இயந்திரத்தில், சோதித்து பார்த்த பிறகே, அவற்றை வாங்க வேண்டும். எனினும், தமிழகத்தில் உள்ள, 16
ஆயிரம் கிளைகளில், பல கிளைகளில், அந்த கருவிகள் இல்லை. அவற்றை, அரசு வழங்க வேண்டும். மேலும், வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களும் பொறுமை காப்பதில்லை; அவசரப்படுத்துவதால், ஊழியர்கள், கள்ள நோட்டை வாங்க நேரிடுகிறது. இருப்பினும், வங்கி ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)