பங்குச்சந்தையில் சரிவு
Posted: Thu,28 Dec 2017 06:28:20 GMT
இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளது.
இன்று காலை உயர்வுடன் தொடங்கிய சந்தை, மதிய நேரத்தில் சரைவை சந்தித்தது. சர்வதேச அளவில் தங்கட்தில் விலை உயர்ந்தது மற்றும் இந்த காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி குறைந்தது என பல்வேறு காரணிகளால் இன்று பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது.
இன்று மாலை சென்செக்ஸ் 63.78 புள்ளிகள் சரிந்து 33,848.03 புள்ளிகளாகவும், நிப்டி 12.90 புள்ளிகள் சரிந்து 10,477.90 புள்ளிகளாகவும் உள்ளன. மும்பை பங்குச்சந்தையில் ஏறக்குறைய 1474 பங்குகள் ஏற்றத்தையும், 1283 பங்குகள் சரிவையும் சந்தித்தன.
  • Share
  • 0 Comment(s)