உச்சம் தொட்ட பங்குச்சந்தை
Posted: Tue,26 Dec 2017 06:19:05 GMT
சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்மஸ் விடுமுறை என முன்று நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று தொடங்கிய இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்று சாதனை படைத்தது.
இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில், சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 34 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. அதேப்போன்று நிப்டியும் 10,500 புள்ளிகளையும் எட்டியது. பிறகு சற்றே சரிவை சந்தித்தாலும், மீண்டும் உயர்வு பெற்று உச்சத்தை தொட்டது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61-ஆகவும், நிப்டி 38.50 புள்ளிகள் உயர்ந்து 10,531.50-ஆகவும் முடிந்தன.
  • Share
  • 0 Comment(s)