பங்குச்சந்தை உயர்வு தொடரும்
Posted: Sat,23 Dec 2017 03:38:32 GMT
நேற்று முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் எண்ணெய், தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதித்துறை ஆகியவற்றின் பங்குகள் வெகுவாக உயர்வை சந்தித்ததால் நிப்டி பெரும் ஏற்றம் பெற்றது.
நேற்றைய வர்த்தக நேர முடிவில் நிப்டி 10,500 புள்ளிகளை தொட்டது. இது நிப்டியின் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகும். சென்செக்ஸ் 184.02 புள்ளிகள் உயர்ந்து 33,940.30 புள்ளிகளாகவும், நிப்டி 52.70 புள்ளிகள் உயர்ந்து 10,493 புள்ளிகளாகவும் உள்ளன.
வரும் வாரங்களில் இந்த உயர்வு தொடரும் என பங்கச்சந்தை வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
  • Share
  • 0 Comment(s)