விஷாலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் சரத்குமார்
Posted: Wed,13 Dec 2017 03:57:05 GMT
நடிகர் சரத்குமார் தன்னுடைய கட்சி தொடர்பான விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, திரைப்பட சங்க பொறுப்புகளில் இருந்து கொண்டே, அரசியலில் விஷால் ஈடுபட்டது தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசி இருக்கும் அவர், “தேர்தலில் ஓட்டுரிமை உள்ள யாரும் போட்டியிடலாம். விஷால் போட்டியிட்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை இத்தனை பெரிதுபடுத்தியிருக்க தேவையில்லை.
எம்.ஜி.ஆரின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சங்கத்தில் இப்போது ஒற்றமை குலைந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தங்கள் மேற்கொண்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)