ஜனவரியில் பார்ட்டி
Posted: Wed,13 Dec 2017 03:09:59 GMT
சென்னை-600028 – 2 படத்துக்குபிறகு வெங்கட் பிரபு மீண்டும் தன்னுடைய குழுவினருடன் இணைந்திருக்கும் படம் வெங்கட் பிரபு. அம்மா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் வெங்கட் பிரபுவின் வழக்கமான குழுவாகிய மிர்ச்சி சிவா, ஜெய், வைபவ், சம்பத் ஆகியோருடன் சத்யராஜ், நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, ஜெயராம், கயல் சந்திரன், சஞ்சிதா செட்டி என, ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பிஜி திவில் நடந்து முடிந்துள்ள நிலையில், பின் தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக சென்னையில் இசைவெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.
  • Share
  • 0 Comment(s)