சொல்லாமல் சொன்ன கார்த்தி
Posted: Wed,13 Dec 2017 03:09:26 GMT
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த பிரச்சினை, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பல இடங்களில் பிரச்சினைகளை கிளம்பி விட்டிருக்கிறது.
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ஏற்பட்ட களோபரங்களை தொடர்ந்து, நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் விலகியுள்ளார். இநிலையில் நடிகர் சங்க பொருளாளர் பொறுப்பில் இருந்து கார்த்தி விலக உள்ளதாக வதந்திகள் பரவியது.
அந்த வதந்திகளை பொய்யாக்கும் விதமாக, ” சங்க கட்டடம் கட்டறோம்... அப்புறம் தான் எல்லாம். விஷால் கல்யாணம் உட்பட...என்ன செயல்!? ” என்று பதிவிட்டிள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் விரையில் கட்டப்படும் எனவும், அதன் பிறகுதான் விஷால் திருமணம் என்றும் தெரிவித்துள்ளதன் மூலம் நடிகர் சங்கத்தில் எந்த குழப்பமும் இல்லை எனவும் விஷால் அரசியல் நடவடிக்கையால் தங்களுக்குள் எந்த மனவேறுபாடும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் கார்த்தி.
  • Share
  • 0 Comment(s)