சத்யாவை பாராட்டிய விஜய்
Posted: Tue,12 Dec 2017 05:51:20 GMT
சிபிராஜ் நடிப்பில், சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் சத்யா. இப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதிஷ், யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, பத்திரிக்கைகள் பாராட்டி இப்படத்துக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்துள்ளன.
இந்நிலையில் நடிகர் விஜய் இப்படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்லார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சிபிராஜ், ”விஜய் அண்ணா தன்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)