பழைய நினைவுகளை அசைபோடும் சயிப் அலிகான்
Posted: Tue,12 Dec 2017 05:50:41 GMT
சமீபத்தில் மறைந்த பழம் பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்ட நடிகர் சயில் அலிகான், தன் இளம் வயதில் நடந்த சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு 3 வயது இருக்கும்போது அம்மா என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வில்லன் சசி அங்கிளை அடிப்பதை பார்த்தேன். யாரும் அங்கிளை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை
வில்லன் சசி அங்கிளை அடிக்க அடிக்க எனக்கு கோபம் வந்தது. நேராக போய் வில்லனின் பேக்கை கடித்துவிட்டேன். இதை பார்த்து சசி அங்கிள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது சும்மா நடிப்பு. வில்லன் அங்கிளை வேண்டும் என்றே அடிக்கவில்லை. அதனால் நீ கோபப்பட வேண்டாம் என்று அங்கிள் என்னிடம் கூறினார்” என்று பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)