”சட்டரீதியான நடவடிக்கை”, பிரபல நாளிதழுக்கு கவுண்டமணி எச்சரிக்கை
Posted: Tue,12 Dec 2017 05:50:05 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து கவுண்டமணி பிரச்சாரம் செய்யவிருப்பதாக ஒரு பிரபல நாளிதழில் செய்தி வெளியானது. ஊடகத்துறையில் மிகவும் முக்கியமான பத்திரிக்கைகளின் ஒன்றான அப்பத்திரிக்கையில் வந்த செய்தி உண்மையென நம்பி மற்ற ஊடகங்களில் அச்செய்தி வெளியானது. ஆனால் கவுண்டமணி இதை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு காலை நாளிதழில் ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. அந்த செய்தி உண்மையல்ல. நான் எந்த கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். நான் எந்த கட்சியையும் ஆதரித்தும் பிரசாரம் செய்யவில்லை. என்னைக் கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)