”பொன்வண்ணன் ராஜினாமாவை ஏற்கவில்லை”, நடிகர் சங்கம் அறிவிப்பு
Posted: Tue,12 Dec 2017 05:22:25 GMT
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா செய்ததையடுத்து, நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் செய்லாளர் விஷால் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அச்சந்திப்பில் இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்த விஷால், “பொன்வண்ணன் தனது நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அனைத்து நிர்வாகிகளும் கூறியுள்ளனர். இதை பொன்வண்ணனுக்கு தெரிவித்துவிட்டோம். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அவரது நிலைப்பாட்டை தெரிவிப்பார்.
கார்த்தி ராஜினாமா செய்யபோவதாக கூறிய தகவல் பொய். நடிகர் சங்க சட்ட விதிகளின் படி தேர்தலில் நிற்கக் கூடாது என்று இல்லை. நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததற்கான காரணத்தை பொன் வண்ணனிடம் சொல்லிவிட்டேன். நடிகர் சங்க நிர்வாகிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார்” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)