”ஸ்டாலினை முதல்வராக்குவோம்”, வைகோ பேச்சு
Posted: Tue,12 Dec 2017 05:21:28 GMT
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன..
நேற்று ஆர்கே நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பிரச்சார கூட்டத்தில் பேசிய வைகோ, “மதவாத சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டவிரோத ஆட்சி நடக்கிறது. மாநில சுயாட்சி பறிபோய் விட்டது. தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆக வேண்டும். மு.க. ஸ்டாலினை முதல்வராக அழைக்கக் கூடிய காலம் வெகுவிரைவில் வரும்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)