அமித் ஷாவால் மோடிக்கு பயம்: ராகுல் காந்தி பேச்சு
Posted: Tue,12 Dec 2017 05:20:02 GMT
குஜராத் மாநிலம் பனாஸ்காந்தாவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”தேர்தல் குஜராத் மாநிலத்தில்தான் நடக்கிறது, ஆனால் மோடிஜியோ ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றி பேசுகிறார். பாரதீய ஜனதாவின் வளர்ச்சி யாத்திரை தோல்வியடைந்துவிட்டது. டாடா நானோவிற்கு பிரதமர் மோடி ரூ. 33,000 கோடி முதலீடு செய்து உள்ளார், ஆனால் உங்களுடைய கல்விக்கு ஒன்றும் செய்யவில்லை. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது நீண்ட வரிசையில் நீங்கள் காத்திருந்தீர்கள், சூட்- பூட் அணிந்தவர்கள் யாராவது வரிசையில் நின்றார்களா? பிரதமர் மோடி ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவதாக கூறினார், ஆனால் 15 பைசா கூட மக்களுக்கு கொடுக்கவில்லை.
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து கப்பர் சிங் வரியை மோடி திணித்து உள்ளார். அமித் ஷாவால் பிரதமர் மோடி பயம் கொண்டு உள்ளார்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)