அமலா பாலுக்கு பதிலாக ப்ரியா ஆனந்த்
Posted: Thu,07 Dec 2017 05:29:05 GMT
பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் ‘காயங்குளம் கொச்சுண்ணி’. பல ஆண்டுகளுக்கு முன் கேரள எல்லைப்பதியை கலக்கி வந்த கொள்ளைக்காரன் காயங்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகிறது இப்படம்.
நிவின் பாலி நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில், நாயகியாக அமலாபால் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேதிகள் இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளார்.
இதையடுத்து அமலாபாலுக்கு பதிலாக ப்ரியா ஆனந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அமலா பாலுக்கு பேசிய சம்பளத்தை விட மிகக்குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் ப்ரியா ஆனந்த்.
  • Share
  • 0 Comment(s)