வெளியாகிறது களவாடிய பொழுதுகள்
Posted: Thu,07 Dec 2017 05:28:28 GMT
தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா , பூமிகா நடிபில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘களவாடிய பொழுதுகள்’. இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரித்திருந்தது.
2010ம் ஆண்டு வெளியாகும் என சொல்லப்பட்ட இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் படம் வெளியாகாமல் தள்ளி வைக்கப்பட்டது.
அதன் பிறகு பல முறை முயற்சி செய்தும் படத்தை வெளிக்கொண்டுவரமுடியாத நிலையில், பிரபுதேவா, படத்தை தன் வசம் எடுத்துக்கொண்டு வெளியிட முடிவு செய்துள்ளாராம். அதன்படி டிசம்பர் 29ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)