கௌதம் மேனனுக்கு விபத்து
Posted: Thu,07 Dec 2017 05:27:48 GMT
ஒரே சமயத்தில் பல படங்களை இயக்கிவரும் பரபரப்பான இயக்குனரான கௌதம் மேனனுக்கு இன்று விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக சிறிய காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
மாமல்ல புரத்தில் இருந்து சென்னைக்கு தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார் கௌதம் மேனன், செம்மச்சேரி என்ற இடத்தில் ஒரு டிப்பர் லாரி கௌதம் மேனன் கார் மீது மோதியதால், கார் பெரிய அளவில் சேதமடைந்தது. சிறு காயங்களுடன் கௌதம் மேனன் உயர் தப்பினார்.
  • Share
  • 0 Comment(s)