லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா
Posted: Thu,07 Dec 2017 05:27:23 GMT
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிங்கம் 3 படத்தையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இப்படத்தையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷிடம் கதை கேட்டு ஒப்புதல் தெரிவித்துள்ளாராம் சூர்யா.
ஒருவேளை செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு லோகேஷின் இயக்கத்தில் நடித்தாலும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)