தேர்தலை நிறுத்த சசி நடப்பது உண்மைதான்: ஸ்டாலின் பேச்சு
Posted: Thu,07 Dec 2017 05:09:32 GMT
தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், தன்னுடைய சொந்த தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக கூறித் தான் கடந்த முறை தேர்தலை நிறுத்தி வைத்தனர். ஆனால் அதற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட யார் மீது நடவடிக்கையோ, எப்ஐஆர்.,ஓ பதிவு செய்யப்படாத நிலையில், தற்போது மீண்டும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த முறை தேர்தல் முறையாக நடைபெறும் என நம்புகிறோம். அப்படி முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் திமுக நிச்சயமாக அமோக வெற்றி பெறும். மீண்டும் தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக கூறப்படுவது உண்மை தான்.” என்று தெரிவித்தார்.
ஆளுனர் ஆய்வு நடத்துவது தொடர்பான கேள்விக்குபதிலளித்த அவர், “கோவையை தொடர்ந்து நெல்லையிலும் கவர்னர் பன்வாரிலால் நேரடியாக ஆய்வு நடத்தி வருகிறார். அடுத்து கன்னியாகுமரிக்கும் அவர் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை நடப்பது குதிரை பேர, அடிமை ஆட்சி என்பதால் தானே நேரடியாக களங்க இறங்க கவர்னர் நினைத்திருக்கலாம். ஆய்வு நடத்த கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. தமிழக அரசு இது குறித்து கவலைப்படவில்லை. ஆட்சி முறையாக நடக்க வேண்டும் என்று விரும்பினால், உடனடியாக சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க இந்த மைனாரிட்டி அரசிற்கு உத்தரவிட வேண்டும்.” என்று கூறினார்..
  • Share
  • 0 Comment(s)