ஆர்கே நகரில் முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம்
Posted: Thu,07 Dec 2017 05:08:52 GMT
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ஆளும் அதிமுக தரப்பு பரபரப்பாக தொடங்கியுள்ளது. திறந்த வேனில் மதுசூதனனுடன் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஓ.ஒபன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தனர்.
பிரச்சாரத்தில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு நல்ல சூழலில் சாதனையை நிகழ்த்தி காட்டி, இரட்டை இலையை பெற்று உங்களை நாடி வந்துள்ளோம். இங்கு போட்டியிடும் மதுசூதனன் உங்கள் அனைவருக்கும் பரீட்சயமானவர்.
இந்த தொகுதியில் அவர் கால்படாத இடமே இல்லை. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்பவர். அம்மா விட்டுச் சென்ற பணிகள் செம்மையாக தொடர மதுசூதனனை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.
  • Share
  • 0 Comment(s)