“அது என்னுடைய வேட்புமனுவே அல்ல” குண்டு போடும் தீபா
Posted: Thu,07 Dec 2017 05:08:06 GMT
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில், தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக செய்தி தெரியவந்ததும் தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்க சென்றேன். அப்போது என்னுடைய விண்ணப்பத்தில் சில பகுதிகளை நான் நிரப்பவில்லை என்றார். என்னுடைய அசல் விண்ணப்பத்தை காட்ட கோரிக்கை விடுத்தேன், முதலில் காட்ட முடியாது என்றார்கள், பின்னர் என்னுடைய தரப்பில் வலியுறுத்தப்பட்டதும் காட்டினார்கள், அப்போதுதான் எனக்கு பெரும் அதிர்ச்சி நேரிட்டது. அப்போது விண்ணப்பம் நான் கொடுத்தது கிடையாது என தெரிந்துக் கொண்டேன்.
தேர்தல் ஆணையத்தில் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பம் நான் அளித்த விண்ணப்பம் கிடையாது. என்னுடைய விண்ணப்பத்தில் 2 தாள்கள் மாற்றப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. நான் வேட்பு மனு தாக்கல் செய்யதால் அதனை நிராகரிக்க வைப்போம் என தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்கள். இதுதொடர்பாக விசாரிப்பதாக கூறிஉள்ளார்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)