முதல்வரை சந்தித்த வரலட்சுமி
Posted: Thu,07 Dec 2017 05:06:47 GMT
நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோரை சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மகளிர் கோர்ட்டு நிறுவ வேண்டும் என்று நாங்கள் நடத்தி வரும் பிரசார இயக்கம் சார்பில் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையின் நிலை என்ன என்பதை அறிவதற்காக இங்கு வந்தேன். அந்த கோரிக்கை சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். மேலும் ஐகோர்ட்டுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் கோர்ட்டு சம்பந்தமான எங்கள் கோரிக்கை இந்த அளவில் உள்ளது.” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)