தென்னாப்பிரிக்க தொடர் குறித்து புஜாரா கருத்து
Posted: Thu,07 Dec 2017 05:06:12 GMT
இந்தியா – இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, “தென்ஆப்பிரிக்க தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். தென்ஆப்பிரிக்கா அணியின் முந்தைய நிலையிலும், தற்போதைய அணியிலும் மாற்றம் உள்ளது. அந்த அணி டி வில்லியர்ஸ் மற்றும் கல்லீஸ் இல்லாமல் சரியான பேலன்ஸ் இல்லாமல் இருக்கிறது.
எங்களுக்கு போதுமான அளவு அனுபவம் உள்ளது. நான் தென்ஆப்பிரிக்கா மண்ணில் 2010 மற்றும் 2013-ல் விளையாடியுள்ளேன். மேலும் தற்போதைய அணியில் உள்ள பலரும் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2013 தொடரில் இடம்பிடித்திருந்தனர். அதேவேளையில் எங்களுடைய வேகப்பந்து வீச்சு வலுவடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)