தமிழகத்துக்கு புயல் ஆபத்து இல்லை
Posted: Thu,07 Dec 2017 01:36:07 GMT
அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்ற போதும், சென்னை, கடலுார், நாகை, காட்டுப்பள்ளி, பாம்பன், எண்ணுார், துாத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய ஒன்பது துறைமுகங்களில், ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதே போல், ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு போகவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் செய்தியாளார்களிடம் பேசும்போது, “காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட மேற்கு திசையில், ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும். கரையை நெருங்கும்போது, வலுவிழக்கும். அதனால், தமிழகத்திற்கு புயல் ஆபத்து எதுவும் இல்லை. சென்னையில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை, கடலுார், நாகை, காட்டுப்பள்ளி, பாம்பன், எண்ணுார், துாத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய ஒன்பது துறைமுகங்களில், ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களுக்கு, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகம், புதுச்சேரியில் வடக்கு கடலோர பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)