முழு நேரமும் ராகுல் காந்தி பற்றியே சிந்திக்கும் மோடி
Posted: Thu,07 Dec 2017 01:35:23 GMT
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளா அம்பேத்கார் சர்வதேச நினைவு மையத்தை, மோடி இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் பேசிய அவர், “இந்தியாவை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு மிக முக்கியமானது. அவரின் புகழையும், செயல்பாடையும் முறைக்க முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மக்களின் மனங்களில் இருந்து அவரின் ஆதிக்கத்தை அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அம்பேத்கரின் வாழ்க்கையை நினைவு கூறும் இடங்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. இந்த நினைவு மையம் அமைக்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகியும் இதனை திறக்காமல் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வந்தது. ஓட்டு வங்கிக்காக மட்டுமே காங்., அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தி வந்துள்ளது. தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக சிவனின் பெயரை ராகுல் கையில் எடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடையாக இருந்தாலும், அரசு விழாவாக இருந்தாலும், எந்த ஒரு விழாவாக இருந்தாலும் ராகுல் காந்தி பற்றியே பேசி வருகிறார் மோடி. அந்த அளவுக்கு ராகுல் காந்தியின் வளர்ச்சி குறித்து மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)