மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க கூடாது: தினகரன் தரப்பு கோரிக்கை
Posted: Thu,07 Dec 2017 01:34:44 GMT
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்ட்யிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழக்க கூடாது என மதுசூதனன் தரப்பு கேட்டுக்கொண்டது. அதே போல் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.
இந்நிலையில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க கூடாது என தினகரன் தரப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் தரப்பு அளித்துள்ள மனுவில், “அதிமுகவின் சட்ட விதிப்படி வேட்பு மனு முன்மொழிவதில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட வேண்டும். ஆனால் பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லாததால் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.
  • Share
  • 0 Comment(s)