காங்கிரஸ் கட்சிக்காக போஸ்டர் அடிக்கும் பாஜக
Posted: Thu,07 Dec 2017 01:34:12 GMT
எந்த ஒரு தேர்தல் களமாக இருந்தாலும், ஒவ்வொரு கட்சியும் தங்களுக்காக மட்டுமே விளம்பரங்கள் செய்யும் ஆனால் பாஜகவோ, காங்கிரஸ் கட்சிக்காக போஸ்டர்களை அடித்துள்ளது.
குஜாரத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அங்கு திடீரென முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியும், குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் இடம்பெற்றிருக்கும் அந்த போஸ்டர்களில் ”ஒரு இஸ்லாமியர் குஜராத் முதல்வராக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
வளர்ர்ச்சி கோஷம் எடுபடாத நிலையில், இந்துத்வா கோஷத்தை கையில் எடுத்திருக்கும் பாஜகவின் இச்செயலை அகமது படேல் கண்டித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர், “போலியான போஸ்டர்களை கொண்டு வதந்தியை பரப்பும் பிரசாரம் மேற்கொள்வது பாரதீய ஜனதாவின் விரக்தியை காட்டுகிறது. தோல்வி பயத்தில் அவர்கள் இதுபோன்ற மோசமான தந்திரத்தில் நம்பிக்கை வைக்கவேண்டும்? நான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)