பாஜக அரசை குற்றம் சாட்டும் மன்மோகன் சிங்
Posted: Thu,07 Dec 2017 01:33:32 GMT
குஜராத் தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அம்மானிலத்டின் ராஜ்கோட் பகுதியில் பிரச்சாரம் செய்த போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது போல் மீண்டும் நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அப்படி நடக்க முடியாத என நான் நினைக்கிறேன். காங்கிரஸ், ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.,வால் அப்படி நடக்க முடியாது.
பா.ஜ., ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நர்மதா விவகாரம் குறித்து என்னிடம் பேசிய மோடி கூறுகிறார். ஆனால் அப்படி எதையும் அவர் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவர் என்னை சந்திக்க வந்திருந்தால் நான் மறுத்திருக்க மாட்டேன். பிரதமராக இருந்த போது அனைத்து முதல்வர்களையும் சந்திக்க வேண்டியது எனது பொறுப்பு. அதனால் நான் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்துள்ளேன்.நமது அரசின் சீரற்ற வெளிநாட்டு கொள்கைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் சிறப்பானதாக இல்லை. பண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய தவறுகளை நாங்கள் ஒது போதும் செய்ய மாட்டோம்”, என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)