நாச்சியார் பட வழக்கு விசாரணை
Posted: Thu,07 Dec 2017 11:15:36 GMT
முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதில் பல பிரச்சினைகள் வரும், ஆனால் தற்போதெல்லாம் எல்லா படமும் வெளியாவதில் சிக்கல்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன பிடிக் கிடைக்கும்? திரைத்துறையினர் மீது எப்படி வழக்கு போடலாம் என பலரும் ரூப் போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாலா இயகக்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாச்சியார் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் சமீபத்தில் யூடியூபில் வெளியானது. அதில் ஜோதிகா ஒரு கெட்ட வார்த்தை பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது. உண்மையில் சொல்லப்போனால் இந்த வார்த்தை திரைப்படத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை ஏனென்றால், திரைப்பட தணிக்கையில் இந்த வார்த்தை நீக்கப்பட்டு விடும். ஆனால் அதற்கு முன்பாகவே இப்படத்தைல் இப்படியான கெட்டவார்த்தை பேசியதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில், இந்திய குடியரசு கட்சியை சாந்த தலித் பாண்டியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, “ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்த பட்டியலை தரவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். நிச்சயமாக அந்த வார்ததையால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற பட்டியலை தரமுடியாது என்பதே உண்மை.
  • Share
  • 0 Comment(s)