தேர்தல் அதிகாரியை விஷால் மிரட்டினாரா?
Posted: Thu,07 Dec 2017 11:15:01 GMT
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து தன் மீதான புகார் குறித்த்து விளக்கம் அளித்தார் விஷால். தன் பிறகு விஷால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் மீண்டும் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது.
தள்ளுபடி செய்யப்பட்ட விஷாலின் மனு மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு காரணம், தேர்தல் அதிகாரியை விஷால் மிரட்டியதுதான் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் இச்செய்த்களில் உண்மை இல்லை என்று விஷால் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தேர்தல் அலுவலரை மிரட்டினேனாம். அதனால் தான் அவர் ஒப்புக் கொண்டதாக அதிகாரி சொல்கிறார். ஒரு தேர்தல் அதிகாரியை நான் எப்படி மிரட்ட முடியும். இதை நான் விடுவதாக இல்லை.
நான் மிரட்டினேனோ இல்லையா என்பது அங்கிருக்கும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஏற்கனவே அங்கு என்ன நடந்தது என்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளேன். என்னை முன்மொழிந்தவர்கள் வீட்டிற்கு வெளியே யார் யாரோ பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நான் தேர்தலில் நிற்கவில்லை என்பது முடிவாகிவிட்டது. இப்போது சொல்கிறேன், தேர்தலில் நிற்காமல், அந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)