கொடிவீரன் வெளியீடு: சசிகுமாரின் ட்விட்டர் பதிவு
Posted: Thu,07 Dec 2017 11:14:28 GMT
சசிகுமார் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் தயாரான கொடி வீரன் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ளார். நடிகை சனுஷா சசிக்குமாரின் தங்கை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் இணைத்தயாரிப்பாளரான அசோக் குமார், ஃபைனான்சியர் அன்பு செழியன் கொடுத்த தொந்தரவுகளால், சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது.
இப்படம் வெளியானது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சசிகுமார், “நீ இருந்து செய்த அன்பும் உன் பின்பான துயரமும் வைராக்கியமாய் எம்மை செலுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)