செயலற்ற அரசு: ஆளும் கட்சியை குற்றம் சாட்டும் விஷால்
Posted: Thu,07 Dec 2017 11:14:02 GMT
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் விஷால், ஆளும் கட்சியை செயலற்ற அரசு என்று சாடியுள்ளார், இந்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், “ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என காத்திருக்கிறேன். செயலற்ற அரசுகளிடமிருந்து, நான் விரும்பும் என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
செயலற்ற அரசு என்று சொன்னதன் மூலம் ஆளும் கட்சியை நேரடியாக எதிர்க்க தொடங்கிவிட்டார் விஷால்.
  • Share
  • 0 Comment(s)