சந்தானம் பேச்சு க்கு மறுப்பு சொன்ன தனுஷ்
Posted: Thu,07 Dec 2017 11:13:28 GMT
சந்தானம் நடிப்பில், சேதுராமன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ’சக்க போடு போடு ராஜா’. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாகியுள்ளார் சிம்பு. இப்படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தனுஷ் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பேசிய சந்தான, தனுஷை ஹாலிவுட் நடிகர் என்று குறிப்பிட்டார். சந்தானத்தின் பேச்சை இடைமறித்த தனுஷ், தன்னை ஹாலிவுட் நடிகர் என்று சொல்ல வேண்டாம் என்ரு கேட்டுக்கொண்டார்.
மேலும், “ஹாலிவுட் என்பது வேறு மொழி படம், அவ்வளவு தான். தொழிலை நன்றாக கற்றுக் கொள்ள ஹாலிவுட் சென்றேன். அவ்வளவு தான். அதற்காக ஹாலிவுட் நடிகர் என்று எல்லாம் என்னை அழைக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)