திருமணவிழாவில் ஜோடியுடன் ஸ்ருதி
Posted: Wed,06 Dec 2017 05:14:52 GMT
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண விழாவில் மணமக்களுக்கு இணையாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஸ்ருதிஹாசனும் அவரது காதலரும்தான். லண்டனை சேர்ந்த மைக்கேல் என்ற இசைக்கலைஞரை, கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் காதலித்து வருகிறார். இத்திருமண விழாவில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசனுடன் மைக்கேலும் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குறிப்பாக ஸ்ருதிஹாசன் மற்றும் மைகேல் இருவரும் பட்டு சேலை, பட்டு வேட்டி பட்டு சட்டை சகிதம் மணமக்களை போலவே வலம் வந்தது ஊடகங்களுக்கு தீனி போடுவதாக அமைந்தது.
  • Share
  • 0 Comment(s)